சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 20ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க் நகரில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது வாங் யீ கூறுகையில் சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஐ.நா.வை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பை உறுதியாகப் பேணிக்காத்து, தெற்குலக நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தார்.
பலதரப்புவாதத்தில் ரஷியாவும் சீனாவும் ஊன்றி நிற்பது, சிக்கலான உலகிலுள்ள நிதானத்தன்மை வாய்ந்த அம்சமாகும் என்று லாவ்ரோவ் தெரிவித்தார். மேலும், சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஒருங்கிணைந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அநே நாள் வாங்யீ, ஜோகன்னஸ்பேர்க் நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழுமத்தின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது வாங் யீ கூறுகையில், பல்வேறு நாடுகளுடன் இணைந்து உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் சக்தியாக செயல்பட்டு, மேலும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க சீனா விரும்புகின்றது என்றார்.