திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களாக அறியப்படும் சங்கர் கணேஷ் எம்ஜிஆர் காலத்திலிருந்து இசையமைத்தவர்.
இதில் சங்கர் இறந்துவிட்ட நிலையிலும் அவரது பெயரை தன் பெயரோடு சேர்த்து சங்கர் கணேஷ் என்று இன்றளவும் அவரையும் சேர்த்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ்.
இந்நிலையில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் தற்போது மூச்சு திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.