Web team
வெளிச்ச விதைகள்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா
பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
பக்கம் : 190. விலை : ரூ. 120
புதுக்கவிதையின் தோற்றத்திற்குப் பிரான்சு நாட்டு ரிம்பாட் மற்றும் மால்லார்;மே ஆகியோரை குறிப்பிடுவர்;. அமெரிக்கக் கவிஞர்; வால்ட் விட்மனுடைய புல்லின் இதழ்கள்புதுக்கவிதையின் முயற்சியாகக் காணப்படுகிறது. தமிழில் பாரதியாரின் வசன கவிதைகள் புதுக்கவிதைக்கான முன்னோட்டமாகப் புதுக்கவிதைப் பாவல்ர்;களால் இனங்காணப்பட்டன.வசனகவிதை, விடுநிலைப்பா, கட்டற்ற கவிதை எனப் பல பெயர்;களால் தொடக்ககாலத்தில் அழைக்கப் பெற்று 1980-களில் புதுக்கவிதை என்னும் பெயரில் நிலை கொண்டுள்ளது.
அய்யா அவர்களின் 16-வது நூல் வெளிச்ச விதைகள். ஹைகூ கவிதையின் திலகமாய் திகழும் கவிஞரின் புதுக்கவிதை நூல் இது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின்செல்லப்பிள்ளை முனைவர்
இரா. மோகன் என்றால் அந்த வரிசையில் முனைவா;. இரா. மோகன் அவா;களின் செல்லப்பிள்ளை கவிஞர் இரா. இரவி என இலக்கிய வட்டத்தினர்; கூறுவர்; (கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு) இந்நூல் 9 பிரிவுகளாக தம் உள்ளடக்கமாக அமைந்துள்ளது. புத்தகத்தின்; முன் அட்டையில் கவிஞரின் படமும் பின்; அட்டையில் முதுமுனைவர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., தமிழ்த்தேனீ. முனைவர். இரா. மோகன் ஆகியோரின் வாழ்த்துரையும் அமைந்துள்ளது. இனி வெளிச்ச விதைக்குள் நுழைவோம்.
உறவுகளின் மாண்பு:
உலக உயிர்கள் தோன்றக் காரணம் ஆனவள் அம்மா.
இதையே கவிஞரும்;.
‘உயிரும் மெய்யும் உயிரிமெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் அம்மா!’
‘உலக உறவுகளின் சிகரம் அம்மா.
உலகம் போற்றிடும் உன்னத உறவு!
‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர்; ஏதுமில்லை.’!
என்னும் கவிதை வரிகள் தாய்மை பற்றி எடுத்துரைக்கிறது.
தந்தை பற்றி
நம் நீதி இலக்கியத்தில் ஒன்றான கொன்றை வேந்தனில்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை—என்றும்
“சங்க இலக்கிய புறநானூற்று பாடலில்
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’ என்னும் கூற்றும்
நா.முத்துக்குமார்; திரைஇசைப்பாடலான.
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே’—
என்னும் திரைஇசைபாடல் குறிப்பிடத்தக்கது.
தந்தையின் அன்பு பற்றி கவிஞரும்.
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தரணியில் உணராத மாந்தர்; இல்லை!
தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர்;
தன்னலமற்றவர்; குடும்பநலம் பேணுபவர்;!
குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு
குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை!’
என்னும் கவிஞரின் தந்தை பற்றிய புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.
திருமணநாள்:
திருக்குறள் இல்வாழ்க்கைப் பற்றி
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. —(குறள்.எண்:45)
என்னும் குறளுக்கு ஏற்ப கவிதையானது.
‘அன்பும் செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
ஆயுள் இருவருக்கும் நீளும் என்பது உண்மை!
ஒருவருக்கு ஒருவர்; விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை!’—
என்பதாக கவிதை முன்வைக்கிறது.
தமிழ், தமிழன், பெருமைகள் :
தமிழுக்கு தமிழர்க்கு தமிழ்நாட்டுக்குக் கேடு சூழம் போதெல்லாம் குரல் கொடுப்பது ஒரு படைப்பாளனின் பணி/ அந்தவகையில் கவிஞரும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி.
‘;உலகின் முதல் மொழி மட்டுமல்ல தமிழ் உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்!
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’!
என்னும் மொழியுணர்;வு கூறிப்பிடத்தக்கது.
தமிழன் பெருமை பற்றிய கவிதை.
“பொக்கவரானின் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்!
ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகுத் தமிழுக்கு ஈடான மொழி இல்லை!
தமிழன் பெருமைகள் தமிழர்கள் அறியவில்லை!
தரணியிர் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்;!”
என தமிழர்;களின் பெருமைகளை குறிப்பிடுகின்றார்.
சமூகப்பதிவுகள்:
எழுத்து: எழுத்து உருவாகும் முறை குறித்து தொல்காப்பியர்; தம் தொல்காப்பிய எழுத்து அதிகராத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து குறித்து கவிதை
“குழந்தைகள் முதன்முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதிப்பாh;ப்பதும் எழுத்து!
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்;வமாகப் பார்க்க வைத்தது எழுத்து!
தலை எழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலையெழுத்து!”
என்பதாக கவிதை எழுத்து பற்றி எடுத்துரைக்கிறது.
கடல்;;;; :
சங்ககாலம் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது.
கடலை பற்றி கவிதை.
“கடலை கடந்து விடலாமென்று
கடல் அலைகள் முயலுகின்றன!:”
ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள்
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்!”
என்று கடல் பற்றி கவிதை எடுத்துரைக்கிறது.
இயற்கை சித்தரிப்பு:
சங்க காலம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலம். இயற்கை பற்றி பாடாத கவிஞரே இல்லை எனலாம்.
அதன் அடிப்படையில் கவிஞரும் இயற்கைப் பற்றி.
“நிலா இங்கே வா! வா! என்று பாடிய பாடல்
நீண்டு வளா;ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது!”
குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ!”
என்;ற கவிதை நிலவின் மேன்மை சுட்டப்படுகிறது.
தன்னபிக்கைமுனை :
எந்த ஒரு மனிதனும் முன்னேற்றம் என்பது தனக்குள்ளே ஆரம்பிக்கும் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.; வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். உயர்ந்த நிலைஅடைய வேணடும். சிறந்த தொழில் அதிபராக வேண்டும். பொருளாதர ரீதியில் வெற்;றி பெற வேண்டும் என்ற வாழ்க்கை எண்ணங்களுக்கு பிரதான ஊற்றாக அமைவது சுயநம்பிக்கைஎன்னும் தராக மந்திரம் தான். இதையே கவிஞரும்
“உன் இலட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும்!
கவனத்தைக் கண்டதில் சிதறவிடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்!
கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள்!”
என்பதாக கவிஞரின் தன்னம்பிக்கை பார்வை அமைகிறது.
சான்றோர் அலைவரிசை:
தந்தை பெரியார் கலப்பு மணங்களை ஆதரித்தார்; பெண்கல்வியை வலியுறுத்தினார்;. பெண்ணுரிமை மாநாடுகள் நடத்திப் பெண்களிடம் விழிப்புணர்;ச்சியை உண்டு பண்ணினார்.பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று குரல் எழுப்பினார்;.
பகுத்தறிவு பகலவன் பெரியார் பற்றி, கவிஞரும்
“மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட தமிழர்களை
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட
வைத்திருப்பார்
நாட்டில் ராசிபலன் படிக்கும் வாசகர்களுக்கு
நல்ல புத்தியினை புகட்டி இருப்பார்
சாதிக்கொரு சுடுகாடு தந்திட்ட பழக்கத்தை
சதியென்று மெய்ப்பித்துத் தகா;த்து இருப்பார்;.!”
என்று கவிதை எடுத்துரைக்கிறது.
உதிரிப்பூக்கள் :
இன்றைய சூழலில்; காகிதத்தின் மகிமை குறித்து விழிப்புணா;வு பெற்று வருகின்றோம். அதன் அடிப்படையில் கவிஞரும் காகிதத்தின் மேன்னை குறித்து
“எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று
எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள்!
தேநீர்; பருகவும் தண்ணீர்; குடிக்கவும்
தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள்!
சுற்றுச்சூழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக
சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள்!”
—என கவிதை எடுத்துரைக்கிறது.
உலக சுற்றுலா நாள், ஆண்டுதோறும் செப்டம்பா; 27ம் நாள் சுற்றுலாத் துறையால் கொண்டாடப்படுகிறது. கவிதையானது
‘பார்;க்காத இடங்களை பார்த்து
பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா!
சிற்பக் கலைகளை ரசித்து சிந்தை
சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா!
ஓவியங்களை கண்டு ரசித்து உள்ளம்
உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா!’
என்று சுற்றுலா பற்றி கவிஞரின் பார்வையாக அமைகிறது.
பட்டதாரிகள் பெருகி பயனில்லை;;;;. இன்றைய 21-ஆம் நுhற்றாண்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது .இது பற்றி கவிஞரும்.
‘பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது!
தெருவுக்கு ஒரு பொறியாளா; இருந்தார்; அன்று
ஒரு வீட்டில் பல பொறியாளர்; உள்ளனர்; இன்று!
வேலையில்லாப் பட்டதாரிகள் வீடுக்கு வீடு உள்ளனர்
விவசாயம் பார்;ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும்!’
என்று வேலையில்லா தீண்டாட்டம் கூறி விவசாயத்தின் மேன்மையும் எடுத்துரைக்கிறார்.
கவிஞர்; அவர்;கள் மதுரை சுற்றுலாவியல் துறை உதவி அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் ஆற்றி வருகின்றார்;. முகநூல், இணையம் என பலதளங்களில் கவிதைப் படைத்து வருகின்றார்;. “அய்யா அவர்களின் வெளிச்ச
விதைகள் உண்மையில் கவிதை உலகிற்கு வெளிச்ச
விதை தான்”;.