சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், சீனத் தேசியளவில் தானிய விளைச்சல் 71 ஆயிரத்து 487.5 கோடி கிலோகிராம் ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.2 விழுக்காடு அதிகமாகும்.
இது தொடர்பாகப் பேசிய சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தைச் சேர்ந்த கிராமப்புறப் பிரிவின் தலைவர் வெய்ஃபான் குவாங், சீனாவின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் வாரியங்கள் விளைநிலம் மற்றும் தானிய பாதுகாப்புப் பொறுப்புகளை உறுதியாக நடைமுறைப்படுத்தி, வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளைச் சமாளித்து, தானிய உற்பத்திப் பணியை கண்டிப்பான முறையில் செயல்படுத்தி, தேசியளவில் அமோக அறுவடை பெறப் பாடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய தரவுகளின்படி, சீனத் தேசியளவில் தானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தேசியளவில் ஒரு தலாமு நிலப்பரப்பில் விளைந்த தானியத்தின் விளைச்சல் 399.1 கிரோகிராமாகும். கடந்த ஆண்டை விட இது 4.4 கிலோகிராம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
