சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர் ராபர்ட் ஃபிகோவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 1-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனா மற்றும் ஸ்லோவாக்கியா இடையேயான இருதரப்பு உறவை உத்திப்பூர்வ பங்காளித்துவ உறவு என்ற உயர் நிலைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சித் தேவைக்கு ஏற்ற இந்த முடிவு, இருதரப்பு ஒத்துழைப்புக்கு புதிய வலுவான உந்து சக்தியை ஊட்டுவதாகவும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு நாட்டுறவை முன்னெடுப்பதற்காக, ஒன்றின் மீதான ஒன்று அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவது, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை விரிவாக்குவது, மக்களிடையே தொடர்பு மற்றும பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிப்பது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகிய 4 அம்ச ஆலோசனைகளை ஷிச்சின்பிங் வழங்கினார். அவற்றில், ஸ்லோவாக்கிய குடிமக்கள் விசா தேவையின்றி சீனாவில் 15 நாட்களுக்கு பயணிப்பது என்ற கொள்கை அடக்கம்.
அப்போது, தலைமை அமைச்சர் ராபர்ட் ஃபிகோ கூறுகையில்,
ஒரே சீனா கொள்கையை உறுதியாக பின்பற்றி வரும் ஸ்லோவாக்கியா, வேறொரு நாட்டின் உள்விகாரங்களில் தலையிடும் எந்தவித செயலையும் எதிர்க்கிறது. ஒரு நாடு தற்சார்பாகவே தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிப் பாதைக்கு பிற நாடு மதிப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமைச்சரவையின் பல முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பெரிய பிரதிநிதிக் குழுவுடன் சீனாவில் பயணம் மேற்கொண்டேன். சீனாவுடனான உறவை வளர்ப்பத்தில் ஸ்லோவாக்கியாவின் மிகுந்த கவனங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் ஃபிகோ குறிப்பிட்டார்.