பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாடகி பி.சுசீலா அவர்கள் கிட்டத்தட்ட 9 மொழிகளில் சுமார் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
மேலும் சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.