சீன மின்சார வாகனங்களின் அச்சுறுத்தல்:அமெரிக்கா அவதூறு

 

“தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துதல்” என்ற பெயரில், சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்வதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

சீனப் புத்தாக்க நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் நுழைவதைத் தடுப்பது, அமெரிக்க இச்செயலின் சாராம்சமாகும். ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் முன்னாள் மூத்த துணை தலைவர் ஜான் குவெல்ச் கூறுகையில், சீன மின்சார வாகன நிறுவனங்களின் தொழில் சின்னம் தற்போது அமெரிக்க சந்தையில் அடிப்படையில் இல்லை. அதிக சுங்க வரி உள்ளிட்ட பொருளாதாரத் தடை கொள்கைகள் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எந்த வாகனங்களும் இல்லை என்றால், எப்படி தரவுகளைத் திருட முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

கருத்தாக்கங்களைக் குழப்பவும் பொதுக் கருத்துக்களைத் தவறான வழிக்குக்கொண்டு செல்லவும் அமெரிக்கா முயற்சிக்கின்றது. 

உண்மையில் அதன் உள்ளூர் நிறுவனங்கள் அச்சுறுத்தலை உணர்ந்து சில பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பாடுபடும். இதேபோன்ற நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

எடுத்துக்காடாக, 2014ஆம் ஆண்டில் பிரான்சில் ஆலஸ்ட் நிறுவனம், 1987ஆம் ஆண்டில் ஜப்பானில் தோஷிப நிறுவனம் உள்ளிட்ட உலகின் மாபெரும் நிறுவனங்களை, அமெரிக்கா தடை செய்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author