தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வேறு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளரை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இதற்கு முன்பு தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும் இவர் இதற்கு முன்னதாக பொதுப்பணி, நகர மற்றும் ஊடக மேம்பாட்டு துறைகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.