இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
இதே போன்று கேரளாவிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பத்தினம் திட்டம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு எர்ணாகுளம், கண்ணூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.