மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மசோதா, வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கை மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
முன்னதாக சென்ற வாரம்,”ஒரே நாடு, ஒரே தேர்தல்” என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.