சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை 55 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்து ஒரு சவரன் 54 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்பிறகு ஒரு கிராம் 6865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7320 ரூபாய்க்கும், ஒரு சவரன் விலை 58,680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 97 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 97 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.