மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாடவூர் இலங்கை அகதி முகாமின் தலைவரால் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது 11 வயது மகள் சரண்யா 6-ம் வகுப்பு படித்து வந்தார். 2014 மே 12 அன்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா இறந்தார். இதற்காக எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை முன்னதாக விசாரணை செய்த நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன், சிறுமியின் மரணத்திற்கு அரசு பொறுப்பாகும் என்று கூறினார். இந்த சுவரை கட்டியதும் அரசுதான். இதற்கு அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதன் விளைவாக, அரசு, மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அங்குள்ள அனைத்து இலங்கை அகதிகளையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சரண்யாவின் தந்தை, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடும்படி மதுரை அமர்வில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், சிறுமிக்கு 5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டதை நிறுத்திவைக்க அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது அதிகாரிகள் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் வழங்கிய நீதிமன்றம் சிறுமியின் உயிரினத்தில் 5 லட்சம் வழங்குவது நியாயமா? என்று நீதிபதிகள் கூறினார்.
இதனை எதிர்த்து நீதிமன்றம் மேல்முறையீடு செய்த அதிகாரிகளுக்கு ரூ. 50000ரூபாய் அபராதம் விதித்தது.