இந்தியா: தொலை தொடர்பும், இணையமும் மனிதர்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத விஷயமாக மாறி வருகிறது.
இதனால், மோசடி அழைப்புகளும், மெசேஜ்களும் அதிகரித்து வருகின்றன. தொலை பேசி மூலம் பணமோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வங்கிகளில் இருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் பேசுவதாக கூறி நிறைய பேர் மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த சிக்கலைச் சமாளிக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சக்ஷு என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்ஷு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயனர்களைப் பாதுகாக்க உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.
‘சக்ஷு’ என்றால் இந்தி மொழியில் கண் என்று பொருள்படும். சக்ஷு தளம், மொபைல் போன் மூலம் மோசடி செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க உதவுகிறது.