தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக கன்னியாகுமரியில் காலை சூரிய உதயத்தை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துவிட்டனர். இதேபோன்று கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது.