பொருளாதார உலகமயமாக்கத்திற்கு ஆசிய-பசிபிக் பங்கு ஆற்றுவதற்கு சீனா திட்டம்

2026ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை சீனா நடத்தும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இப்பிரதேசத்தின் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்ப்பதாக, நவம்பர் 16ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.


ஆசிய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சிக்கு சீனா பங்காற்றும் மன உறுதி மற்றும் பொறுப்புணர்வு இதன் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளன.
உலகில் பொருளாதார அதிகரிப்புக்கு மிகுந்த உயிராற்றல் வாய்ந்த பிரதேசமாக ஆசிய-பசிபிக் பிரதேசம் திகழ்கிறது. கடந்த பல பத்துக்கு மேலான ஆண்டுகளாக, இப்பிரதேசத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் வளர்ந்து வரும் சூழல் உள்ளது. உண்மையான பலதரப்புவாத மற்றும் திறந்த பிராந்தியவாதத்தில் இப்பிரதேசம் ஊன்றி நின்று வருகிறது.

அவற்றின் விளைவாக, ஆசிய-பசிபிக் பிரதேசம் உலக கவனத்தை ஈர்க்கும் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு திறப்பு மற்றும் ஒருங்கிணந்த ஆசிய-பசிபிக் நாடுகளின் ஒத்துழைப்பு ஒழுங்கு முறையை உருவாக்குவது, பசுமை மற்றும் புத்தாக்கத்துடன் கூடிய ஆசிய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சிக்கான உந்து ஆற்றலை வளர்ப்பது, கூட்டு நலன் தந்து அனைவரையும் உள்ளடக்கிய தன்மையுடன் கூடிய வளர்ச்சி கண்ணோட்டத்தைக் பின்பற்றுவது ஆகிய 3 முன்மொழிவுகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் வழங்கியுள்ளார்.

இவை, ஆசிய-பசிபிக் நாடுகளின் பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைப்பதை விரைவுபடுத்தி, ஆசிய-பசிபிக் வளர்ச்சிக்கான புதிய யுகத்தை உருவாக்குவதற்கு திசையை வழிகாட்டியுள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது. 

Please follow and like us:

You May Also Like

More From Author