சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்து, உலக அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிகரித்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, நாணய நெருக்கடி ஏற்பட்ட போது, சீனாவும் அமெரிக்காவும், 20 நாடுகள் குழுவின் இதர உறுப்பு நாடுகளுடன் இணைந்து, உலகப் பொருளாதாரத்தை மீட்டன. தற்போது, உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருக்கிறது.
இதன் வளர்ச்சி சரிநிகரற்ற நிலையில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தின் மொத்த அளவு, உலகில் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்பது, இரு நாடுகளின் பொறுப்பாக உள்ளது.
தொடர்புடைய ஆய்வுகளின்படி. உலக வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, வெளிநாட்டுத் திறப்புச் சந்தை மீதான நம்பிக்கையை ஒன்றுக்கு ஒன்று வலுப்படுத்தி உலகலாவிய அடிப்படை வசதிக்கான கட்டுமானத்துக்கு இரு நாடுகளும் முக்கியத்துவம் அளித்தால் உலக வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு லட்சம் கோடி அமெரிக்க டாலரை அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்க-சீன உறவு குறித்து அமெரிக்க சிந்தனை கிடங்கு கானெச்சி சர்வதேச அமைதி நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் அமெரிக்கா மற்றும் சீனாவின் ஒத்துழைப்புகள் மூலம் காலநிலை நெருக்கடியை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ) வரையறையை வகுத்து, அணு ஆபத்தைக் கட்டுபடுத்துவது, அடுத்த சுற்று உலகளவிய தொற்று நோயைத் தடுப்பது உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நன்மைகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், சீன-அமெரிக்க தொடர்புக்கான அனுபவங்களைத் தொகுத்து, எதிர்வரும் இரு தரப்புறவின் வளர்ச்சி திசையை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.