கடல்கன்னி ஷோவில் பயங்கர விபத்து….

Estimated read time 0 min read

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற தாதா மியான் உர்ஸ் திருவிழாவில், நீர் தேக்கப்பட்ட கண்ணாடித் தொட்டி உடைந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

பஹ்ரைச் மாவட்டம் ஃபகர்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ‘ஜல்பரி’ (கடல்கன்னி) காட்சிப்படுத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டு, நீரழுத்தம் தாங்காமல் திடீரென உடைந்து நொறுங்கியது.

கண்ணாடித் தொட்டி உடைந்த வேகத்தில் நீர் வீச்சோடு கண்ணாடித் துண்டுகளும் சிதறி விழுந்ததில், அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பட்டு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த சிறுவர்கள் உடனடியாகச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், இருவருக்கு பஹ்ரைச் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முறையான அனுமதியின்றி ஆபத்தான முறையில் நிகழ்ச்சியை நடத்திய 7 அமைப்பாளர்களில் 4 பேரைக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author