ஜப்பானின் புதிய பதிப்பு பாடநூலுக்கு கண்டனம்

ஜப்பான் அரசு புதிய பதிப்பு பாடநூலை ஏற்றுக்கொண்டு, போரின் போது ஜப்பான் படையின் வன்முறை செயல்களைப் பலவீனப்படுத்தும் கருத்துக்கள், ஆசியாவின் பல நாடுகளின் பொது மக்களிடையே கடும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியுள்ளன. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, தன் ஆக்கிரமிப்பு வரலாற்றை பற்றிய ஜப்பான் அரசின் மனப்பான்மை மற்றும் செயலை 82.45 விழுக்காட்டினர் கடுமையாக கண்டித்தனர்.


ஜப்பான் அரசு ஏற்றுக்கொண்ட புதிய பதிப்பான வரலாற்று பாடநூலில், உண்மைக்குப் பொருத்தமற்ற அம்சங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இதில் காலனியாதிக்க காலத்தில் பாலியல் தொழிலுக்கு பெண்களை கட்டாயப்படுத்தியதை மறுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இதற்கு 95.35 விழுக்காட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் அரசு அடிப்படையான வரலாற்று உண்மையை மதிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்து, ஆக்கிரமிப்பு வரலாற்றை மூடிமறைத்து பூசிமெழுகும் செயல்கள் மீது உயர் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர்.


வரலாற்றில் இதர நாடு மீது ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்திருந்த நாடாக, வரலாற்று பாடநூல் பிரச்சினையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று 91.82 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். பாலியல் தொழிலுக்கு பெண்கள் மற்றும் உழைப்பாளர்களைக் கட்டாயப்படுத்தியதற்கு ஜப்பான் அரசு மன்னிப்பு கேட்டு ஈடு செய்ய வேண்டும் என்று 90.26 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.


இந்த கருத்து கணிப்பு, ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரேஞ்சு, அரபு, ரஷியா உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 7431 வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author