தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு  

தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

முத்துகண்ணன் (21), விஜய் (25) ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், செல்வம் (21), பிரசாந்த் (20), செந்தூர்கனி (45), முத்துமாரி (41) ஆகியோர் பலத்த காயமடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author