சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற சீன ஜனநாயக லீக், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான சீனா சங்கம் மற்றும் கல்வித் துறை உறுப்பினர்களை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 6ஆம் நாள் பிற்பகல், சந்தித்து, அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பின் உரை நிகழ்த்திய ஷிச்சின்பிங், புதிய காலத்தில், கல்வி, அறிவியல் தொழில் நுட்பத் துறைகளின் திறமைசாலிகளுக்கான சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் தேவையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலிகளுக்கு கல்வித் துறையின் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். திறமைசாலிகள் தொடர்ந்து அதிகமாக உருவாக்குதல், ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்தல் போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.