சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, நவம்பர் 3ஆம் நாள், ஜெர்மனியின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாடெஃபுலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது சீன மற்றும் ஜெர்மனி உறவின் வளர்ச்சிக்கான முக்கிய அனுபவமாகும். ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நலன் என்பது செயல் வழிக்காட்டலாகும். கூட்டாளியுறவானது இரு தரப்புறவுக்கான திசையமைவாகும். சீனாவும் ஜெர்மனியும் பெரிய நாடுகளாகும். இரு நாடுகளின் உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருவதை நிலைநிறுத்துவது,

இரு தரப்புகளின் நலன்கள் மற்றும் பல்வேறு தரப்புகளின் கூட்டு எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது. தவிர்க்கப்பட முடியாத வேறுபாடுகள் இருந்த போது, இரு தரப்பும் தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு, ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை வலுப்படுத்தி, தவறாகப் புரிந்தொண்டத்தைச் சரிசெய்து, கூட்டு நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

வாடெஃபுல் கூறுகையில்,

சீனாவுடனான உறவில் ஜெர்மனி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஒரே சீனா எனும் கொள்கையில் ஜெர்மனி ஊன்றி நின்று வருகிறது. சீனாவின் தொடர்புடைய பல்வேறு துறைகளுடனான தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சர்ச்சையைக் குறைத்து, ஜெர்மனி-சீன பன்முக நெடுநோக்குக் கூட்டாளிறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author