நமது பூமிக்கு இன்னொரு நிலா வரப்போகிறது என்ற செய்தி அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள இந்த விண்கல், 2024 பிடி5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், பூமியை சுமார் 55 நாட்கள் சுற்றி வர உள்ளது. இது பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, ஒரு தற்காலிக நிலா போல செயல்படும்.
இது போன்ற நிகழ்வு கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்திருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த புதிய விண் கல்லை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய விண்கல் இந்த மாதம் 29ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர இருக்கிறது. இது பூமியை முழுமையாக சுற்றாது என்று ஒரு வில் வடிவத்தில் மட்டுமே சுற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் பூமியை சுற்றும் இந்த விண்கல் தானாகவே பூமியை விட்டு நகர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை வைத்து, விஞ்ஞானிகள் விண்கற்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகள் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் மூலம், எதிர்காலத்தில் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விண்கற்கள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியும். இந்த புதிய நிலா, அறிவியல் ஆய்வுகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. வானில் ஒரு புதிய பொருளை வெறும் கண்களால் காணும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது என்பது மிகவும் அற்புதமான விஷயம்.