இவ்வாண்டு சீனா சுமார் 100 விண்வெளி ஏவுதல் கடமைகளை மேற்கொள்ளும்
2023ஆம் ஆண்டுக்கான சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கை பற்றிய நீல அறிக்கையை சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப குழுமம் பிப்ரவரி 26ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்டதோடு, 2024ஆம் ஆண்டு சீனாவின் விண்வெளி கடமைகளை பற்றியும் அறிமுகப்படுத்தியது.
இவ்வாண்டு முழுவதும் சீனாவில் சுமார் 100 முறை விண்வெளி ஏவுதல் கடமைகள் மேற்கொள்ளப்படும். இது புதிய வரலாற்று பதிவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் முதலாவது வணிக விண்வெளி ஏவுத் தளத்தில் முதலாவது ஏவுதல் கடமை மேற்கொள்ளப்படும்.
பல செயற்கை கோள் விண்மீன் தொகுதியின் இணைப்பு கட்டுமானம் விரைவுப்படுத்தப்படும். திட்டத்தின்படி, சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப குழுமம் சுமார் 70 முறை விண்வெளி செலுத்தல் கடமைகளை ஏற்பாடு செய்து, 290க்கும் மேலான விண்கலங்களை விண்ணில் செலுத்தி, பல முக்கிய திட்டப்பணிகளை மேற்கொள்ளும்.
நீல அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு சீனா 67 விண்வெளி ஏவுதல் கடமைகளைச் செயல்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.