சீனாவின் ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தகவல் தொலை தொடர்பு வளர்ச்சிக்கான சாதனைகள் பற்றிய செய்தியாளர் கூட்டம் டிசம்பர் 17ஆம் நாள் நடைபெற்றது.
இவ்வாண்டு ஷிட்சாங்கில் புதிதாக அமைக்கப்பட்ட 5ஜி தளங்களின் எண்ணிக்கை 7035ஆகும். இதுவரை, 17ஆயிரத்துக்கும் மேலான 5ஜி தளங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 70 விழுக்காட்டுக்கும் மேலான கிராமங்களில் 5ஜி இணையச் சேவை அளிக்கப்பட்டு, மக்களின் தொலைத்தொடர்பு தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஷிட்சாங்கின் தொலை தூரத்தில் உள்ள மாவட்டங்களிலும், முக்கிய சாலைகள் மற்றும் காட்சியிடங்களிலும், தொலைத்தொடர்பு வசதி தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. தரவுகளின்படி, இதுவரை, ஷிட்சாங்கின் முக்கிய நெடுஞ்சாலைகளில் 4ஜி அல்லது 5ஜி சேவை பரவலின் விகிதம் 85 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.