இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
“ககன்யான் ஏவுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை விண்ணில் செலுத்த முயற்சித்து வருகிறோம்,” என்று சோமநாத் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த ஸ்பேஸ் எக்ஸ்போவை பார்வையிட்டபோது தெரிவித்தார்.
டிசம்பர் 2018 இல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ககன்யான் திட்டமானது, குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதையும், நீண்ட காலத்திற்கு இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களின் அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.