ஸ்பேஸ் எக்ஸின் போலாரிஸ் டான் தனது ஐந்து நாள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) அன்று அதன் நான்கு விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பியது.
இது உலகின் முதல் தனியார் விண்வெளி நடைப் பயணமாகும்.
இந்த பயணத்தின் மிஷன் கமாண்டராக பணியாற்றிய தொழில்நுட்ப பில்லியனர் ஜாரெட் ஐசக்மேன் செயல்பட, மிஷன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் மருத்துவ அதிகாரி அன்னா மேனன், மிஷன் ஸ்பெஷலிஸ்ட் சாரா கில்லிஸ் மற்றும் மிஷன் பைலட் ஸ்காட் போட்டீட் ஆகியோர் உடன் பயணித்தனர்.
இவர்களில் அன்னா மேனன் மற்றும் சாரா கில்லிஸ் இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் ஆவர். ஸ்காட் பொட்டீட் முன்னாள் விமானப்படை தண்டர்பேர்ட் விமானியாவார்.
முதல் தனியார் விண்வெளி நடை பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது போலாரிஸ்
