பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று காலை மத்திய அரசு அல்லது பாதுகாப்புப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி, பக்வால்பூர், முஷாராபாத் ஆகிய மூன்று இடங்களில் இன்று (மே.07) நள்ளிரவு நம் ராணுவம் ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாதிகள் முகாமினை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடவடிக்கையை துவக்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது ‛ ஜெய்ஹிந்த்’ என ராணுவ எக்ஸ்தளத்தில் பதிவேற்றியுள்ளது. மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.