புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22ம்தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் பங்கேற்றார்.
ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாகக் குறைப்பது பற்றியும், வரி குறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாதாம் மற்றும் உலர்ப் பழங்கள், டிராக்டர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏசி உட்பட சுமார் 175 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைய வாய்ப்புள்ளது.