ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக்கான கலை நிகழ்ச்சி செப்டம்பர் 3ஆம் நாளிரவு 8 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடத்தப்பட்டது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போரில் கலந்து கொண்ட மூத்த வீரர்கள், கௌரவங்கள் மற்றும் விருதுகளைப் பெற்ற பிரதிநிதிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.