தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!! 

Estimated read time 0 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மறுப்பு தெரிவித்தார். அதோடு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 வட்டாட்சியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது.

இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்காக உத்தரவிட்ட வருவாய் துறை அலுவலர் ஒருவரை பணி உயர்வு செய்யப்பட்டதாக தவறான செய்திகள் பரவியுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர் மு. கண்ணன் என்பவருக்கு பதவி வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியாக பணிபுரிந்த து. கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியர் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டது என கூறியுள்ளார். பெயர் குழப்பம் காரணமாக ஊடகங்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author