ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களையொட்டி வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யுமாறு லெபனான் மக்களை இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த சிறிய தாக்குதலுக்கு பிறகு லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி நீடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) இரு நாடுகளும் கடுமையான மோதலில் ஈடுபட்டன.
பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்பைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலின் பரந்த மற்றும் ஆழமான பகுதியில் ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகளுக்கு மேல் அதற்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.