பொங்கல் என்றாலே தமிழர்களுக்கு தனி மகிழ்ச்சிதான். காலகாலமாக திருவிழாவாக கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகை அன்று புத்தாண்டை அனைத்து புது பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்.
இதோடு நம்பர்களுடன் பாடல் பாடி, நடனமாடி ஒரு வருடத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அந்த ஒரு வாரத்தில் பொங்கிவிடுகிறோம்.
இப்படி பொங்கல் அன்று நாம் பாடி, மகிழ நம் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் வந்துள்ளது. அதில் ஒரு சில பொங்கல் பாடல்களை பற்றி பார்ப்போம்.
இதில் முதலில் 1959 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டை போற்றும் ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என்னும் பாடல்.
அடுத்ததாக எம்.ஜி.ஆர் நடித்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சத்தியம் நீயே தரும தாயே’ என்ற பாடல் தமிழ் திருநாளின் தமிழரின் பெருமை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக 1966ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜியின் சரஸ்வதி சபதம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோமாதா எங்கள் குல மாதா…’ என்ற பாடல் தமிழர்கள் பாடுகளை தன் குடும்பத்தில் ஒருவராக நினைகிறார்கள் என்பதை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக 1967ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தில் இடம் பெற்றுள்ள, “விவசாயி…விவசாயி” என்ற பாடல் மற்றும் ‘ நல்ல நல்ல நிலம் பார்த்து’ என்ற பாடல் விவசாயத்தை பறைசாற்றுகிறது.
அடுத்ததாக 1989 ஆம் ஆண்டு வெளிந்த கார்த்தி, குஷ்பூ நடித்த வருஷம் 16 படத்தில் வரும் ‘பூ பூக்கும் மாசம் தை மாசம்…’என்ற பாடல் தை திங்களை போற்றும் விதமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தின் ‘ பொதுவாக என் மனசு தங்கம் ‘ என்ற பாடல்.
அடுத்ததாக பொங்கல் அன்று பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் ஒரு பாடல் என்றால் அது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ’மகாநதி’ திரைப்படத்தின் ‘தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…’ என்ற பாடல். இப்பாடல் நேரடியாக பொங்கலை பற்றி வந்திருக்கும்.
அடுத்ததாக தைப்பொங்கல் திருநாள் என்றாலே அனைவருக்கும் முதலில் தோன்றும் பாடல், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் தளபதி திரைப்படத்தின் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை…’ என்ற பாடல்தான்.
அடுத்ததாக தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அனைத்துக்கும் சவால்விட்ட தளபதியின் ‘போக்கிரிப் பொங்கல்…’ தான். இந்த பாடல் 2007ஆம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜா குரலில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா…’ என்ற பாடல் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.
ஹிப்ஹாப் தமிழா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிரபலமான ‘டக்கரு டக்கரு…’ பாடல்.
நம் தமிழ் சினிமாவில் பொங்கலை பறைசாற்றும் விதமாக இன்னும் நிறைய பாடல்கள் உள்ளது. அவை அனைத்தையும் கேட்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.