வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.
இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவாட்டார பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இல்லை என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
இது எதற்காக என அனைவரும் குழம்பிய நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, இன்றிரவு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.