இந்த வார துவக்கத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்தது.
எனினும் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் மழை பாதிப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேல் நோக்கு நகர்ந்து தற்போது மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.