கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்த நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதாவது ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி யாக தொடர முடியும் என்பதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்திக்கு பதில் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி களம் காண்கிறார்.
இந்த தொகுதியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாஜக யாரை வேட்பாளராக நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது நடிகை குஷ்புவை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக கட்சியின் உறுப்பினர் குஷ்புவிடம் கேட்டபோது தேர்தல் வந்துவிட்டாலே தேவையில்லாத வதந்திகள் பரவுகிறது.
வயநாடு தொகுதியில் நான் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை பாஜக மேல் இடம் என்னிடம் பேசவில்லை. எனக்கு மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வந்தாலும் அதனை 100% முழு மனதுடன் ஏற்று செய்வேன். மேலும் கேரளா மாநிலம் வய நாட்டில் நான் போட்டியிட போவதாக தகவல்கள் பரவும் நிலையில் இது குறித்து இதுவரை பாஜக மேலிடம் என்னிடம் பேசவில்லை என்றும் அவர் வதந்தி என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக பாஜக யாரை அந்த தொகுதியில் வேட்பாளராக நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.