கர்நாடகாவில் ஹூக்கா பார்களுக்கு சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை, இதுபோன்ற நிறுவனங்களின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும், விளம்பரம் செய்யக்கூடாது, ஹூக்கா புகைக்கும் கருவிகளை விற்கக்கூடாது என்றும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, ஹூக்காபர்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
45 நிமிடம் ஹூக்கா உபயோகிப்பது 20 முதல் 40 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.