மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு எல்லாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பிற அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர், அரசு பல் தொழில்நுட்ப பயிற்சி பள்ளி ஆசிரியர், உடற்பயிற்சி இயக்குனர், நூலகர், வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், சத்துணவு சமையலர், உதவியாளர், ஊராட்சி செயலர், எழுத்தர் ஆகியவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.