இந்தோனேசியாவின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிரபோவோ சுபியாண்டோவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 20ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும், இந்தோனேசியாவும் பாராம்பரிய நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு தொடர்ச்சியாகவும் நிதானமாகவும் உயர்த்தப்பட்டு வருகிறது.
2025ஆம் ஆண்டு, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும்.
இரு தரப்புகளின் ஒத்துழைப்புக்கு இது புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றார். அரசுத் தலைவர் பிரபோவோவுடன் இணைந்து நெருக்கமான நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, சீன-இந்தோனேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு வழிக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.