ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று, பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சி மாநாட்டில் பங்கெடுக்க ரஷியாவின் கசானுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செல்வதை முன்னிட்டு, சீன ஊடக குழுமம் தயாரித்த “ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு” ரஷிய மொழியின் மூலம் அக்டோபர் 22ஆம் நாள் முதல் ரஷியத் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனம், Rossiyskaya Gazeta எனும் செய்தித்தாளின் இணையத்தளம் உள்ளிட்ட பல மேடைகளில் ஒளிபரப்பாகும். இது, ரஷியாவின் பல்வேறு துறையினரின் எதிர்பார்ப்பையும் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு” அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள் மற்றும் உரையாடல்களில் குறிப்பிட்ட சீனப் பண்டைய கவிதைகள் மற்றும் பழமொழிகளை முக்கிய அம்சமாக கொண்டு, மக்களே முதன்மை, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம், பொதுவான செழிப்பைப் பெறுதல், உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண்பாட்டுக் கையேற்றல், நாகரிகத்தின் பல்வகைமை முதலியப் கருப்பொருட்களுடன், சீனப் பாரம்பரியப் பண்பாடுகளில் அடங்கிய புதிய யுகத்தின் உள்ளடக்கம் மற்றும் உலகமயமாக்க மதிப்பை விவரித்து, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைசிறந்த அரசியல் விவேகம், ஆழ்ந்த பண்பாட்டு உணர்வுகள் மற்றும் பரந்துபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு சீன நவீனமயமாக்கத்தின் பண்பாட்டு அடிப்படையைக் காட்சிப்படுத்துகின்றது.