பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் உரை

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 23ஆம் நாள் ரஷியாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர் உரையில் கூறுகையில் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்த புதிய உறுப்பு நாடுகளை வரவேற்கிறோம். உறுப்பு நாடுகளின் அதிகரிப்பு, பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய மைல் கல்லாகும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், உலகம் புதிய பதற்றம் மற்றும் சீர்திருத்த காலத்தில் இருந்து, முக்கிய தெரிவுகளை எதிர்கொள்கின்றது. பிரிக்ஸ் அமைப்பை “உலகின் தென் பகுதியின்” ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான முக்கிய வழியாகவும், உலக மேலாண்மை சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கான முன்னணி ஆற்றலாகவும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் சில முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலில் அமைதியான பிரிக்ஸ் உருவாக்கி, பொது பாதுகாப்பைப் பேணிகாக்க வேண்டும். பொதுவான, பன்முக, ஒத்துழைப்பான மற்றும் தொடரவல்ல பாதுகாப்புக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்தினால்தான், பொதுவான பாதுகாப்பு பாதையில் முன்னேற முடியும். இரண்டு, புத்தாக்க பிரிக்ஸ் உருவாக்கி, உயர் தர வளர்ச்சியில் முன்னேற வேண்டும். புதிய சுற்று அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புரட்சியும் தொழில் சீர்திருத்தமும் வேகமாக வளர்ந்து வருகிறது. யுகத்தின் வளர்ச்சிப் போக்கிற்கிணங்க புதிய ரக உற்பத்தி ஆற்றலை வளர்க்க வேண்டும். மூன்று, பசுமை பிரிக்ஸ் உருவாக்கி, தொடரவல்ல வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகளுடன் பசுமை தொழில், தூய்மை எரியாற்றல் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்க சீனா விரும்புகிறது. நான்கு, நியாயமான பிரிக்ஸ் உருவாக்கி, உலக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்துக்கு வழிகாட்ட வேண்டும். உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, நியாயம், நீதி, திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கியத் தன்மை ஆகியவற்றை கருத்தாக கொண்டு உலக மேலாண்மை சீர்திருத்தத்துக்கு வழிகாட்ட வேண்டும். ஐந்து, மனித பண்பாட்டு பிரிகஸ் உருவாக்கி, பல்வகை நாகரிகங்கள் கூட்டாக நிலவுவதை ஆதரிக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் ஆழ்ந்த வரலாற்றையும் பிரகாசமான பண்பாடுகளையும் கொண்டுள்ளன. வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையேயான இணக்கம் மற்றும் சகவாழ்வை ஆதரித்து, கல்வி, விளையாட்டு மற்றும் கலை முதலிய துறைகளிலான ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து, “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின்” உயர் தர வளர்ச்சிக்கான புதிய நிலைமையைத் திறந்து வைத்து, “உலகின் தென் பகுதியில்” உள்ள மேலதிக நாடுகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author