வந்தவாசி, ஏப் 21
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் பிரம்மோற்சவ திருவிழாவின் 7 ஆம் நாள் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அறங்காவலர் சங்கர், உபயதாரர் எஸ்.டி. ராஜபாண்டியன், டி.எஸ். சிவா, வெற்றிவேல், சண்முகம் மற்றும் தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜகவீரபாண்டியன் பாண்டியன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் மேளதாளத்துடன் தேர் வலம் வந்தது.