பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 ஐத் தொடங்கி வைத்தார்.
இதுபோன்ற ஒரு உச்சி மாநாடு இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இது ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உலகளாவிய தலைவராக மாறுவதற்கான இந்தியாவின் உந்துதலில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
நான்கு நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிரியேட்டர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
