லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை ‘பொருளாதாரக் குற்றவாளி’ (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மல்லையா நேரில் இந்தியா வராதவரை, அவரது மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் அங்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் முதலில் இந்தியா திரும்ப வேண்டும். அவ்வாறு வர தயாராக இல்லை எனில், இந்த மனுவை எங்களால் விசாரிக்க முடியாது” என்று மல்லையா தரப்பிற்கு தெரிவித்தது.
மேலும், அவர் நீதிமன்ற நடைமுறைகளை தவிர்க்கிறாரா என்பதை பதிவு செய்ய நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்தியா திரும்பினால் மட்டுமே விசாரணை: விஜய் மல்லையாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் நிபந்தனை
