இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது 100 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதில் தாக்குதல் நடைபெறும் என இஸ்ரேல் கூறியிருந்தது.
அதன்படி இஸ்ரேல் ஈரான் மீது தொடர்ந்து 100 வெடிகுண்டுகளை ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து வீசியது. இதனால் ஈரானில் ஆயுதக் கிடங்குகள், ராணுவ தளங்கள் சிறிது சேதமடைந்துள்ளன மேலும் இந்த தாக்குதலினால் ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தது. இந்த சேதங்களுக்கு இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தெரிவித்து இருந்தது. இதனால் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் அதிகமாகி வருகிறது.
இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியதாவது, ஈரானுக்கு அதன் பிராந்திய நலன்கள் மற்றும் ஒருமைப்பாடு, மக்களை பாதுகாப்பதில் வரம்புகள் இல்லை என்று கூறினார். இதன் மூலம் ஈரான் இஸ்ரேலை தாக்குவதற்கு தயாராகி வருகிறது என்பது தெளிவாகிறது.