தமிழகத்தில் இன்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தமிழ்நாடு, உள் தமிழக மற்றும் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.