சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷச்சின்பிங் ஷாங்காய் மாநகரின் யாங்பு பிரதேசத்தில் உள்ள லாவோ யாங் சு என்ற பிரசாரக் குழுவைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கு பதில் கடிதம் எழுதி தன்னுடைய அன்பான வாழ்த்துகளையும் எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கடிதத்தில் ஷிச்சின்பிங் மக்கள் நகரம் மக்களால் கட்டப்பட்டுள்ளது. மக்கள் நகரம் மக்களுக்கானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களைச் சுற்றியுள்ள தெளிவான கதைகளை நீங்கள் தொடர்ந்து சொல்லி, மக்கள் நகரத்தின் கருத்தை ஆழமாக நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகமான குடிமக்களை ஊக்குவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நகர்ப்புற கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டு, இணக்கமான மற்றும் அழகான நகரத்தைக் கூட்டாக கட்டியமைத்து, மகிழ்ச்சியான மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.