தென் கொரியாவின் கியோங்ஜு நகரின் வோல்சோங் அணுமின் நிலையத்தில் 29 டன் எடையுடைய அணுக்கழிவு நீர், மாதிரி ஆய்வு இல்லாத நிலையில் கடலில் வெளியேற்றப்பட்டது குறித்து புலனாய்வு நடத்தப்படும் என்று அந்நாட்டின் அணு ஆற்றல் பாதுகாப்பு ஆணையம் ஜனவரி 12ஆம் நாள் தெரிவித்தது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை அறிந்து கொள்ளும் விதம், வெளியேற்றப்பட்ட நீர் அளவு, காரணம் முதலியவை குறித்து, அணு ஆற்றல் பாதுகாப்பு நிபுணர்கள் புலனாய்வு நடத்தி, இந்த அணுமின் நிலையத்துக்கு அருகிலான கடல் நீர் மாதிரிகளைத் சேகரித்து வருகின்றனர் என்றும் இந்த ஆணையம் தெரிவித்தது.