சீனா-எஸ்சிஓ துறைமுகப் பொருளாதார ஒத்துழைப்பு மையம் திறப்பு

Estimated read time 1 min read

சீனா-எஸ்சிஓ துறைமுகப் பொருளாதார ஒத்துழைப்பு மையம் செப்டம்பர் 3ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையில் துறைமுக வளங்களின் பகிர்வு மற்றும் கூட்டு வளர்ச்சியை இம்மையம் ஊக்குவிப்பதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்துக்கும், பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் பிரதேசத்தின் உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புக்கும் துணைபுரியும்.

மேலும், துறைமுகத்தில் சுங்க அனுமதி மாதிரியின் புதுப்பிப்பை முன்னேற்றுவது, கடல் சார் விவகாரங்களில் வெளிநாட்டுத் திறப்பு மற்றும் வசதிமயமாக்க ஒத்துழைப்பை ஆழமாக்குவது, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் வளங்களை ஒன்றிணைத்து தரத்தை உயர்த்துவது ஆகிய மூன்று துறைகளில் இம்மையம் கவனம் செலுத்தும் என்று தெரியவந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author