பெரு நாட்டு அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பெருவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்காக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானத்தின் மூலம் லிமா நகரைச் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் ஷி ச்சின்பிங் எழுத்து மூல உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-பெரு உறவு ஆழமாக வளர்ந்து வருகிறது. இரு தரப்புகளுக்கிடையிலான ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை வலுவடைந்துள்ளதோடு, முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் சீராக முன்னேறி, இரு நாட்டு மக்களுக்கு பயனுள்ள நலன்களை வழங்கியுள்ளன என்றார். இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-பெரு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய நிலைக்கு இப்பயணம் உயர்த்தும் அதேவேளையில், இரு நாட்டுப் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகள் மேலதிக புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றும் என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.