இந்தியா-பாகிஸ்தான் மோதல்: தான் மத்தியஸ்தம் செய்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேச்சு  

Estimated read time 1 min read

வாஷிங்டனில் நடைபெற்ற ‘Board of Peace’ நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
குறிப்பாக, இந்த மோதலில் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் ஒரு புதிய புள்ளிவிவரத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் டிரம்ப் இந்த மோதல் குறித்து 80-க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளார். ஒவ்வொரு முறையும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை அவர் மாற்றிக் கூறி வருகிறார்.
ஆரம்பத்தில் 5 விமானங்கள் என்றார். பின்னர் ஆகஸ்ட் மாதம் 7, நவம்பரில் 8, இந்த மாத தொடக்கத்தில் 10, தற்போது 11 என்று கூறியுள்ளார்.

You May Also Like

More From Author